• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அட…நம்ம பிரதமருக்கு யூடியூப்-ல 1 கோடி பாலோயர்ஸா..?

Byகாயத்ரி

Feb 1, 2022

பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா. இவரது யூடியூப் சேனலுக்கு 36 லட்சம் பாளோயர்ஸ் உள்ளனர். மூன்றாவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் உள்ளார். இவருக்கு 30.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.இந்திய அளவில் ஒப்பிடும் போது அரசியல் தலைவர்களில் மோடிக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி உள்ளார். ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் 5.25 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது துவங்கப்பட்டது. இந்த பக்கத்தில் அக்ஷய் குமாருக்கு தான் அளித்த பேட்டி மற்றும் இந்தி திரைப்படத்துறையினருடான பிரதமர் மோடியின் கலந்துரையாடல், கொரோனா பரவலை கட்டுப்படுத்துதவற்கான நடைமுறைகள் போன்ற பிரபலமான விஷயங்களின் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.