• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

+1 தேர்வில் 3606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் ..!!

ByA.Tamilselvan

May 19, 2023

. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட பல பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் .பெற்று சாதனை படைத்துள்ளனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு.தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர், ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும், இயற்பியல் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 2 பேரும், விலங்கியல் 34 பேரும், கணினி அறிவியல் 940 பேரும்,வணிகவியல் 214 பேரும், கணக்கு பதிவியல் 995 பேரும், பொருளியியல் 40 பேரும், கணினி பயன்பாடுகள் 598 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 132 பேரும் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்,மொத்தத்தில் 3606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் .பெற்று சாதனை படைத்துள்ளனர்.