• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் லாராதத்தா… வலைத்தளத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

Byadmin

Aug 8, 2021

புதிய கதைகளை தயார் செய்து அது வெற்றி பெறுமா என்கிற பயத்தில் படங்களை தயாரிப்பதை காட்டிலும், பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களின் ரீமேக் உரிமையை பெற்று படங்களை தயாரிப்பது நீண்டகாலமாக உள்ளது.


தற்போது அரசியல் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பழக்கம் இந்தி தெலுங்கு, தமிழ் மொழிகளில் பரவலாகி வருகிறது. அந்த அடிப்படையில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பெல்பாட்டம் என்ற இந்தி படம் தயாராகி உள்ளது. இதில் அக்ஷய்குமார், வாணி கபூர், கியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயணிகளுடன் விமானத்தை கடத்திய கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் வருகிறார். ரஞ்சித் திவாரி இயக்கி உள்ளார்.


இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் நடத்தி முடித்துள்ளனர். படத்தின் கதை 1984-ல் நடப்பது போன்று உள்ளது. அப்போது இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். எனவே படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் லாரா தத்தா நடித்துள்ளார்.


அவரது தோற்றம் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு இந்திராகாந்தி போலவே இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் லாரா தத்தாவை பாராட்டி வருகிறார்கள். லாரா தத்தா தமிழில் அரசாட்சி, டேவிட் படங்களில் நடித்துள்ளார்.