• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மறைந்தார் மதுரை ஆதீனம்… அருணாகிரி நாதர் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்…!

By

Aug 13, 2021

தமிழகத்திலேயே தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு அவர் காலமானார்.

மதுரை ஆதீனத்தின் இளமைக்காலம் முதல் அவர் செய்துள்ள யாரும் அறிந்திடாத சில தகவல்கள் இதோ…

தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அருணகிரி நாதர், 1975ம் ஆண்டு மே 27ல் மதுரை ஆதீனத்தின் இளவரசராக பொறுப்பேற்றவர்.

மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றது முதல் பல ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார்.

1980 மதுரை ஆதீனமாக போட்டியின்றி நியமிக்கப்பட்டார். அன்று முதல் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் ஞானசம்பந்த தேசிகர் வடமாச்சாரியார் சுவாமிகள் என அழைக்கப்பட்டு வருகிறார்.

அருணகிரி நாதர் ஆன்மீகப் பணிக்கு வரும் முன்னர் இளமை பருவத்தில் மாலை நேர செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.