• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை

Byவிஷா

May 6, 2024

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் மாநிலத்திலேயே 97.45 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் சதவீதம் 97.45 ஆகும். தமிழகத்தில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு 2-து இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 2019, 2020-ம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. நடப்பு ஆண்டும் முதல் இடம் பிடித்ததால் 3 முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் கல்வி அதிகாரி கீதா மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.
இதுபோல் அரசுப் பள்ளி அளவிலும் 95.75 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு பள்ளிகள் உள்ள நிலையில், 4,548 மாணவர்கள், மாணவிகள் 5,935 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 383 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4,274 பேர், மாணவிகள் 5,763 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 037 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.