• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி..,

ByPrabhu Sekar

Oct 16, 2026

சென்னை செயின்ட் தாமஸ் மலையில் உள்ள தனியார் பள்ளியில் MONTECH -2026 என்ற தலைப்பில் மாணவர்கள் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.

பள்ளியின் பிரமண்டமான ஆடியோரியத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிதம், தமிழ், அறிவியல் என பல்வேறு துறைகளிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது
புதிய கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய புவியியல் ஆய்வு துறையின் தமிழ்நாடு கூடுதல் தலைமை இயக்குனர் பவானி ராமநாதன், அருட்தந்தை தன்ராஜ் ஆகியோர்
கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

இதில் மாணவர்களே தயாரித்த மின்சார மோட்டார் சைக்கிள், ரோபோட்டிக், தானியங்கி மற்றும் மக்ழை காலங்களில் விவசாயிகளின் பயிர்கள் அழிவதை தடுக்கும் விதமான தானியங்கி மேற்கூரை ஆகிய பல்வேறு கண்டிபிடிபிடிப்புகளை தாயரித்து காட்சிபடுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தமிழ் துறை சார்பில் நடந்த கண்காட்சியில் நாட்டுபுற கலைகள் நடனம், பாரம்பரிய உணவு வகைகளும் இடம் பெற்றன.

கண்காட்சியில் சுற்று வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.