• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவில் கராத்தே போட்டியில் பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளார் பரிசு வழங்கி பாராட்டு…

Byadmin

Aug 5, 2021

சென்னையில் நடைபெற்ற ஓபன் தேசிய கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் ஆலங்குளம் தாலுகா இஷின்ரியூ கராத்தே மாணவ மாணவிகள் 16 பேர் பங்கேற்று தங்கம். வெள்ளி வெங்கல பதக்கங்களை பெற்றனர்.

பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னி வளவன் பெண்கள் பிரிவில் தங்க பதங்கம் பெற்ற மாணவி மகா பிரியதர்சினி, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்ற மாணவி பிளஸ்சி சாண்ட்ரா, வெண்கல பதக்கம் பெற்ற மாணவி சபரிதா.

ஆண்கள் பிரிவில் தங்க பதக்கம் பெற்ற மாணவர்கள் சுபாஷ், நவின், பிரகாஷ், வெள்ளிபதக்கம் பெற்ற மாணவர்கள் தஷ்வின். மோகிஷ், வெண்கல பதக்கம் பெற்ற மாணவர்கள் சங்கர் சர்மா, கர்னிஷ், ஆகியோரையும். பெண்கள் ஓவர் ஆல் சாம்பியன் பெற்ற மாணவி மகா பிரியதர்சினி ஆகியோரை துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன் பாராட்டி சான்றிதழ் பதக்கங்களை வழங்கினார்.