• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துறையூர் அடுத்த பச்சமலையில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்…

Byadmin

Jul 26, 2021

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலையில் புத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி நிஷா(21). கார்த்திக் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது இளவேனில் நிலவன் என்ற குழந்தையுடன் வாழ்ந்தார். நிஷாவின் கணவரது நினைவு தினத்தையொட்டி சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த சமயத்தில் தனது ஒன்றரை வயது மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தனது இடது கை மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த பெற்றோர்கள் திரும்பி வந்தத போது நிஷா ரத்தவள்ளத்தில் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்படட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். மேலும் குழந்தை இளவேனில் நிலவனின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் நிஷா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பெற்ற மகன்யே கொலை செய்த சம்பவம் அபபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.