• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர திருவிழா!…

By

Aug 12, 2021

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா தங்கப் பல்லக்கில் பவனி வந்து ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோவில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் தாயாருடன் தங்க பல்லக்கில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தன விழாவின் முக்கிய சீகர நிகழ்ச்சியான தங்கப் பல்லக்கு பவனி நடைபெற்றது முன்னதாக கல் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் மற்றும் ஆண்டாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தீபாராதனைகள் காட்டப்பட்டன பின்னர் கோஷ்டி பாராயணம் நடைபெற்று மங்கல வாத்தியங்களுடன் தங்க பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாராயண பெருமாள்டன் பவனி வந்த ஆண்டாள் தாயாரை பக்தர்கள் மனம் உருகி தரிசித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள் ஆண்டாள் தாயாரை பெருமாளை வழிபட்டனர்.