• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சமூக வலைதளங்களில் ஆராயாமல் பதிவிட்ட தவறான தகவலால் பாதிக்கப்பட்ட வியாபாரி..!

BySeenu

Aug 27, 2026

நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலையில் 40 வருடங்களாக “A1” சிக்கன் கடை செயல்பட்டு வருகிறது.

இங்கு கோழி இறைச்சிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு இறைச்சி கழிவுகள் ஒவ்வொரு நாளும் நகராட்சி நிர்வாகத்தால் சேகரித்துக் கொண்டு செல்லப்படும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக நகராட்சி நிர்வாகம் கழிவுகளை சேகரிப்பதற்கு வராததால் அந்த கழிவுகள் தேங்கி உள்ளன.

இதனால் அதிகளவு துர்நாற்றம் வீசி உள்ளது இறைச்சி கழிவுகளை கடைக்காரர்களும் கொண்டு சென்று வேறு எங்கும் கொட்டக்கூடாது என்பதால் கடைக்காரரும் செய்வதறியாது தவித்துள்ளார்.

இந்நிலையில் அதனை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்தினரை அணுகுவதற்கு முயற்சித்து இறைச்சிக் கழிவுகளை புகைப்படம் எடுத்து அரசு பணியாளரான தனது வாடிக்கையாளரிடம் தங்களுக்குத் தெரிந்த நகராட்சி ஊழியர்களிடம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் சம்பந்தப்பட்ட துறை மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட குழுக்களில் பகிரப்பட்டு இறுதியில் சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி கடைக்காரர்கள் தான் இவ்வளவு அசுத்தமாக கடைகளை வைத்து நடத்தி வருகிறார்கள் என்பது போன்று வேறு சில புகைப்படங்களை எல்லாம் வைத்து இந்த கடையின் பெயரைக் கொண்டு சமூக வலைத்தளங்கள் சில youtube செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகி இருந்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட கடைக்காரர் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது வாடிக்கையாளர்களும் இதுகுறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர் இதனால் வியாபாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது கடைக்காரர் வழக்கமாக இறைச்சிக் கழிவுகளை சேகரிக்கும் பணியாளர்கள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக வராமல் இருந்ததால் தேங்கி கிடந்ததையும் நாள்தோறும் இறைச்சி கழிவுகளை சேகரிப்பதற்கு பணியாட்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நீலகிரி கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினரும் இந்தக் கோரிக்கையை நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நகராட்சி அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும் அதே சமயம் இறைச்சி கடைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணியை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி சென்றுள்ளார்.

இதனிடையே நீலகிரி கோவை இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முஸ்தபா மற்றும் கடையின் உரிமையாளர் பைசல் சம்பந்தப்பட்ட யூடியூப் செய்தி சேனல் மற்றும் இதனை பதிவிட்ட அவர்களை தொடர்பு கொண்டு உண்மையை எடுத்துரைத்ததை அடுத்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இது போன்று சிலர் உண்மையை ஆராயாமல் பதிவுகளை பதிவு செய்வதால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் எனவே ஒரு முறை விசாரித்து உண்மை நிலையை தெரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களிலும் youtube செய்தி சேனல்களிலும் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள் முன் வைத்துள்ளனர்.

இறைச்சிக் கழிவுகளை தினசரி முறையாக அகற்ற வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை பரிசீலித்து, இறைச்சிக் கழிவுகளை தினமும் அகற்றுவதற்குத் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.