• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஒரத்தநாடு அருகே நிலத்தகராறில் ஏழு பேருக்கு அருவா வெட்டு, அண்ணன் தம்பி இருவர் தலைமறைவு…

Byadmin

Aug 5, 2021

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையில் உள்ள வீரனார் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோயிலையும், அந்த இடத்தையும் தனக்கு சொந்தமானது என்றும், அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் கூறி வருகிறார். ஆனால் இன்னொரு தரப்பினர் கோயில் ஊருக்கு பொதுவானது எனகூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஆகியோர் அந்த பிரச்சினைக்குரிய இடத்தை அளவீடு செய்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பழனிவேல் மகன் சின்னராசா, மற்றும் தமிழ்நாடுஆதிதிராவிட ர் முன்னேற்றகழகம் தஞ்சை மாவட்ட செயலர் அவரது அண்ணன் பாக்கியராஜா ஆகிய இருவரும் சேர்ந்து அளவீடு செய்ததை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் மறுதரப்பினர் ஜெய்சங்கர், ஜெய்சங்கர் மகன் பாலா, பானுமதி, ராஜாத்தி ஆகியோர் எதற்காக தடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்ன ராசாவும், பாக்கியராஜ் இருவரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அங்கிருந்தவர்களை சரமாரி வெட்டியுள்ளனர். இதில் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள உறவினர்கள் ஓடி வந்து தடுத்தபோது அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 8 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டிய இருவரையும் தேடி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலை உள்ளது.