• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளத்தில் 193 பயனாளிகளுக்கு ரூபாய். 7.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

Byadmin

Aug 5, 2021

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார். வருவாய் துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 24 பயனாளிகளுக்கு விதவை பெண் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவிதொகை, இலவச வீட்டு மனைப்பட்டா இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட 193 பயனாளிகளுக்கு ரூபாய். 7 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ராமச்சந்திரன், தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜ மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து, வட்டார வளார்ச்சி அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.