• Wed. Dec 11th, 2024

ஹைதி நிலநடுக்கம்- உயிரிழப்பு அதிகரிப்பு!…

By

Aug 16, 2021

ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்ந்துள்ளது.


ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள், கட்டிடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் சீட்டு கட்டுகளை போல் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. பல முறை ஏற்பட்ட நில அதிர்வுகளில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினார்கள். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 1,297 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.