


நடிகர் சிலம்பரசன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அவர் நடித்த மாநாடு படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அடுத்த படம் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் புகைப்படங்கள் மேலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் சிம்பு வேற லெவல் கெட்டப்பில் வருகிறார். முற்றிலுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அவரது புகைப்படம் உள்ளது ரசிகர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் படமாக வெந்து தணிந்தது காடு படம் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

