• Sat. Apr 20th, 2024

வெளியூர் போறீங்களா?… கோவை கமிஷனர் சொல்வதை உடனே கேளுங்க!…

By

Aug 14, 2021

கோவை மாநகரில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் வீட்டை கண்காணிக்க போலீசாருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
மாநகரில் நடக்கும் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக ரோந்து காவலர்கள் மூலம் வெளியூர் செல்லும் பொது மக்களின் வீடுகள் தனியாக வசிக்கும் வயதானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்க எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது 94981 – 81213 என்ற மொபைல் எண்ணிலும் 81900-00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு தங்கள் வீட்டின் முகவரி குறித்து தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள ரோந்து போலீசார் மூலம் வீட்டை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும்.

எனவே வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் வயதானவர்கள் தனியாக வசித்து வரும் பட்சத்தில் அது தொடர்பாக தகவல் தெரிவித்தால் அவர்களுக்கான பாதுகாப்பு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *