நாகர்கோவில் மிக பழமையான மருத்துவ மனை என்று, இன்றும் மக்கள் அடையாளம் காட்டும், போற்றும் வில்லியம் மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அறையை. இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் திறந்து வைத்தார்.
புதிய நவீன வசதிகளை கொண்ட அறையை திறந்து வைத்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டாக்டர் ஜெயலால் தெரிவித்து.
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்.பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் முக கவசம் அணிந்து,பொது இடங்களில் இடைவெளியில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்..
இல்ல விழாக்கள், திருவிழாக்களை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது.
இந்தியா முழுதும் நீட் தேர்வை சுமார் 15 லட்சம் மாணவ_ மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதில்.தமிழக மாணவ,மாணவிகள் 85,000_ம் பேர் தேர்வு எழுத உள்ளார்கள்.
செப்டம்பர் திங்கள் 18_ம் நாள் நீட் தேர்வு என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்.தமிழகத்தில் அதற்கான முடிவை தமிழக அரசு விரைந்து எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு தடுக்க முடிமயாத நிலையில். நாம் நீட் தேர்வை விரும்பாத நிலையிலும், அடுத்த ஆண்டு முன் கூட்டியே தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உரிய முடிவை எடுக்கவேண்டும். தமிழகஅரசின் நீட் தேர்வின் பார்வை இத்தகையது என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என டாக்டர் ஜெயலால் தெரிவித்தார்.