தூத்துக்குடி அருகே பனை மரத்திலிருந்து தவறிவிழுந்து காயம் அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தடிகாரமுத்து மகன் பொன்முத்து (26), பனையேறும் தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பனை மரம் ஏறும்போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.