• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வழக்கில் இரண்டு மாதத்திற்கு பின் 3 பேர் கைது செய்யப்பட்டனர்!…

By

Aug 10, 2021

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குமரவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). லாரி டிரைவரான இவரும், இவரது கிளீனர் உமா சங்கர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி இரவு திருச்சியிலிருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சமயபுரம் கடைவீதியில் இரவில் டிபன் சாப்பிடுவதற்க்காக தனியார் திருமண மண்டபம் எதிரே லாரியை நிறுத்திய போது மர்ம நபர்கள் சிலர் டிரைவர் மற்றும் கிளீனரை மிரட்டி 2 செல்போன் மற்றும் 8 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் வெங்கடேஷ் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த மர்ம நபர்கள் 2 மாதத்திற்குப் பின் வாகன சோதனையின் போது குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கினர்.

விசாரணையில் தாளக்குடியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ்(20), மண்ணச்சநல்லூர் இந்திராரைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்(20), அஜித்குமார் (20) ஆகியோர் லாரி டிரைவரிடம் செல்போன்,பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர்.பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த அனைவரையும் திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணப்பாறை கிளைச் சிறையில் அடைத்தனர்.