தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம் .செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயலாளர் முத்துக்குமார் ஜி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முடிவெடுத்து, முதற்கட்டமாக அர்ச்சகர்களை நியமித்திருப்பதற்கு வரவேற்கத்தக்கது. கொரோனா காலத்தில், இந்து மத கோவில்களில் அருகாமையில் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு இருந்தது. தொற்று பரவிய காரணத்தினால் கடைகள் அடைக்கப்பட்டு , அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இந்து சமய அறநிலைத்துறையினர் வாடகை மற்றும் வரிகளை கேட்டு தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி அன்று விதிமுறைகளுக்கு உட்பட்டு, சதுர்த்தி விழா ஊர்வலம் சீறும் சிறப்புமாக நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.