• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!…

By

Aug 9, 2021

இந்து சமய அறநிலைய துறையின் ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்க கூடாது என முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்து மதத்தை பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்கு தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும் இந்திய அரசியல் சட்டம், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.

முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும் போது, கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

எந்த மதமும் குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை எனவும், பிற மதத்தினரை புண்படுத்த கூறவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.