• Mon. Apr 21st, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பாஜகவினர் மனு

Byadmin

Jul 15, 2021

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் மற்றும் பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் வசித்து வரும் காணி இன மக்கள் தங்களின் பகுதிகளில் மராமத்து பணிகள் மற்றும் பழுதடைந்த தங்களின் வீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல்-திணறல்-
பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடங்கள் கூட கட்ட முடியாமல் அவதி-என குற்றச்சாட்டு-சிமெண்ட்,செங்கல் ,கம்பி போன்ற பொருள்கள் கொண்டு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதை தடுக்கக்கோரி மலைவாழ் மக்கள் குமரிமாவட்ட பாஜக கட்சியினரின் ஆதரவோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை தடிக்காரன்கோணம் பேச்சிப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளில் பெருமளவு மலைவாழ் மக்கள் காணி குடியிருப்புகளில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களது வீடுகளை பராமரிக்கவோ அல்லது கழிப்பிடங்கள் கட்டவோ சிமெண்டு ,கம்பி ,தகரம் போன்ற பொருள்களை வன சோதனை சாவடியை கடந்து எடுத்து கொண்டு செல்லும் போது அவை தடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மராமத்து பணிகள் மற்றும் பழுதடைந்த வீடுகளின் பணிகளை மேற்கொள்ள முடிய வில்லை, மேலும் பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடங்கள் கூட கட்ட முடியாமல் அங்கு வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். என அப்பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் வனத்துறையினரின் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.