• Sat. Feb 15th, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு சிவப்பு நிற அணி வெற்றி!…

By

Aug 16, 2021

தேனியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றமாற்று திறனாளிகளுக்கான டி20 சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு மஞ்சள் நிற அணியினர் 23 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு சிவப்புநிற அணியினரை தோற்கடித்து வெற்றி கோப்பையை தட்டிச் சென்றனர்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து ,சிவப்பு ,மஞ்சள், பச்சை, நீல நிற அணிகளாக பிரித்துக்கொண்டனர். அவர்களுக்கான டி20 சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டிதேனி அருகே தப்புகுண்டில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியினரும் மூன்று லீக் போட்டிகளை எதிர்கொண்டனர். இதில் அதிக புள்ளிகளைப் பெற்ற மஞ்சள் நிற அணியும், சிவப்பு நிற அணியும் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்த இறுதிப் போட்டியில் மஞ்சள் நிற அணி முதலில் பேட்டிங் செய்து எதிரணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

163 வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சிவப்பு நிற அணியினரால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் மஞ்சள் நிற அணியினர் வெற்றி பெற்று, வெற்றி கோப்பையும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றனர்.

23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சிவப்பு நிற அணியினருக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் இரண்டாம் இடத்திற்கான கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங், பௌலிங் ,விக்கெட் கீப்பிங் செய்த விளையாட்டு வீரர்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது இயலாமையை மறந்து , விளையாடுவதை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களை உற்சாகப்படுத்தி பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்துகொண்ட சிகப்பு நிற அணி கேப்டன் சிவகுமார் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் பங்களாதேஷில் நடைபெற உள்ள மாற்றத்திற்கான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்து அவருக்கு பாராட்டுகளும், உற்சாகமும் அளித்தனர்.