• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆதீனத்தின் உடலுக்கு ஆதீன மடாதிபதிகள் நேரில் அஞ்சலி!…

By

Aug 14, 2021

10 நாட்களுக்கு பின் மதுரை ஆதினத்திற்கான புதிய பீடாதிபதிக்கு பட்டம் சூட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் சிகிச்சைபெற்று வந்த மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியான
292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.


இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஆதினத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதினம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம், இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா். இதனையடுத்து அவரது மடத்தின் உட்புறத்தில் உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் ஆதீனத்தின் உடல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 4 மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.