மக்களைத் தேடி மருத்துவ திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடக்கிவைத்தார். தொடர்ந்து வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் திட்டமாகும்.
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே கோவையில் 544 பேர் ஒரே நாளில் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நோயாளிகள் கண்காணிப்பு அதிகாரிகள் கூறும்போது –
பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருந்து பொருட்கள் வினியோகம், பிசியோதெரபி சிகிச்சை, மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது என 3 விதமாக செயல்படுகிறது.
இதற்கென 90 பெண் சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்களை மருத்துவமனைக்கு வந்து சிரமப்படுவதை தடுக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த அதிகாரி கூறினார்.