• Fri. Mar 29th, 2024

பெண் என்பதால் புறக்கணிப்பதா?.. பொங்கியெழுந்த உயர் நீதிமன்றம்!…

By

Aug 12, 2021

தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெற உள்ள செவித்திறன் குறைப்பாடுயோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுக்கப்பட்டதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


டில்லியில் நடந்த தகுதிப் போட்டிகளில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்சியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சமீஹா பர்வின் தடகள போட்டிகளில் இதுவரை பெற்றுள்ள பதக்க விவரங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்து, நாளைக்குள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றமே நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *