
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு
பள்ளியில் பழங்குடியின மாணவி என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த சிறுமியை மீண்டும் மீண்டும் உதைப்பதை அந்த வீடியோவில் காணலாம். சிறுமி பள்ளி சீருடையில் பள்ளிப் பையை கையில் ஏந்தியபடி காணப்படுகின்றார். அவரை அந்த சிறுவன் இடைவிடாது தாக்கி வருகின்றார். இதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டிருக்கிறார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் அந்த மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தூங்கா மாவட்டத்தில் வசித்து வருகிறார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகள் போலீசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த சிறுவன் சிறுமியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.