நெல்லை மாவட்ட திராவிடத்தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு கொடுக்க மாவட்ட பொது செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் திரண்டு வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது- சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மக்கள் – அருந்ததியர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பாளையங்கோட்டை வார்டு எண் 39, சிஎன் கிராமம், பாபுஜி காலணி, வார்டு எண் 25 ராஜேந்திர நகர் ஆகிய பகுதியில் வாழும் அருந்ததியர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. நிதிச்செயலாளர் முத்துராஜ், அமைப்பு செயலாளர் மீனா, மாநகர செயலாளர் வேல்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ், மாநகர இளைஞரணி செயலாளர் தளபதி விஜய் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் சண்முகம் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.