• Thu. Apr 18th, 2024

நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் மாதந்தோறும் நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

Byadmin

Aug 2, 2021

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் மாநில செயலாளர் சுமன் தலைமையில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவாகயை  கொடுத்தனர் இன்னும் ஏதாவது சுபாஷினியின் மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியது

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் காவலர்கள் கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மற்றும் எங்களுக்கு மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் காளவாசல் சாலை விரிவாக்கத்தின் போது மேட்டுத் தெரு பகுதியில் குறுகிய சாலையில் ஒரு மதுபானக்கடை உள்ளது இப்பகுதியில் பொதுமக்கள் பெண்கள் மற்றும் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு அச்சமும் ஏற்பட்டுள்ளது ஆகையால் சமூக நலன் கருதி மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *