• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

துரையின் அட்சய பாத்திரம் மற்றும் மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் 87 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது….

Byadmin

Jul 26, 2021

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ரோட்டோரத்தில் இருப்பவர், ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு இன்று வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சிக்கு எஸ் எஸ் காலனி சத்சங்கம் செயலாளர் ஸ்ரீராமன் தலைமை தாங்கினார்.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப் பெற்று விழாவில் சிறப்பு விருந்தினராக காஞ்சி சங்கர மடம் மதுரை கிளையின் செயலாளர் ஆடிட்டர் சுந்தர் தலைமை வகித்து மதிய உணவினை வழங்கினார் .

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் இன்று 500 பேருக்கு உணவு வழங்கப் பெற்றது.

மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பின் சார்பாக கடந்த 81 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அட்சய பாத்திரம் அமைப்பு கடந்த கொரனா காலத்தில் இருந்து 81- நாட்களாக மதுரை இரயில்வே நிலையம், பெரியார் பேரூந்து நிலையம், காளவாசல், சிம்மக்கல், MGR பேரூந்து நிலையம் போன்ற இடங்களில் உள்ள ஏழை ,எளிய மக்களுக்கு மதிய உணவினை வழங்கி வருகிறார்.