• Wed. Dec 11th, 2024

திமுகவுக்கு பாஜக பளார்!….

By

Aug 9, 2021

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய திமுக, இன்று உரிய நேரத்தில் நடத்தலை நடத்ததால் பல கோடி நஷ்டம் என்று கணக்கு காட்டுவதா..? என்று திமுக அரசுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.


தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமையை விளக்கும், வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தற்போது தியாகராஜன் வெளியிட்டார்.


நடப்பு நிதி ஆண்டின் இடைக்கால நிதிநிலை மதிப்பீடுகளின்படி தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1% ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7%ஆக குறைந்துள்ளது. 2008-09 ஆண்டில் 13.35% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21ம் ஆண்டில் 8.7% ஆக குறைந்துள்ளது. உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருவாய் 28% சரிந்துள்ளது.


வணிக வரியில் இருந்து வரும் வருமானம் 4.19% குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 %ஆக சரிந்துள்ளது. வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதேபோல, பல ஆண்டுகளாக சொத்து வரியையும் உயர்ந்தவில்லை.
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய 1200 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமல் வைத்துள்ளன. தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது. தமிழகத்தில் 1 கி.மீ. தூரம் பொது போக்குவரத்து இயங்கினால் ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது, எனக் கூறினார்.


இந்த நிலையில், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை பற்றி பாஜக செய்தி தொடர்பாக நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “எதிர்க்கட்சியாக இருந்த போது, உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று நீதிமன்றத்தில் தடை பெற்ற தி மு க, இன்று ஆளுங்கட்சியான பிறகு அ தி மு க அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு நிதி வரவில்லை என வெள்ளை அறிக்கை விடுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது, மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என்று போராட்டம் செய்த தி மு க ஆளுங்கட்சியான பிறகு, மின்கட்டணத்தை பத்து வருடங்கள் உயர்த்தாதது தவறு என வெள்ளை அறிக்கையில் சொல்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்த போது, சொத்து வரியை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, சொத்து வரியை உயர்த்தாததால் தான் அரசுக்கு வருமானம் இல்லை என வெள்ளை அறிக்கையில் கூறுகிறது. எதிர்கட்சியாக இருந்த போது, மானியங்களை நேரடியாக வங்கிகணக்கில் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பின்,மானியங்களை நேரடியாக பணமாக பெற்ற பயனாளிகள் குறித்த தகவல் இல்லை என வெள்ளை அறிக்கை விடுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, வரிவசூலை கொள்ளையடிக்கிறது அரசு என்ற திமுக, வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும் என வெள்ளை அறிக்கையில் கேட்கிறது. அதாவது எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அரசு நாசமாக வேண்டும், ஆளும் கட்சியாகும் போது, அரசுக்கு வருமானம் வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.