தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் கோயமுத்தூர் பகுதியை கொங்கு நாடாக அறிவிக்கப் போவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்ததை தினமலர் நாளிதழ் பெரிதாக வெளியிட்டுள்ளது இதனை பாஜக மற்றும் தினமலர் பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத் கொள்கை பரப்பு செயலாளர் சம்பத் போராட்டத்துக்கு தலைமை வகித்தார் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தினமலர் நாளிதழை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து எரிகின்ற பேப்பரில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர் இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.