• Tue. Apr 23rd, 2024

தாலிபன்கள் எடுத்த அதிரடி முடிவு… காபூலுக்கு சூட்டப்படப்போகும் புதிய பெயர் என்ன தெரியுமா?

By

Aug 16, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தற்போது எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் பறந்துவந்து தங்கள் தேசத்தவரையும் தூதரக அதிகாரிகளையும் மீட்டுச் சென்றன. அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது.இதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இருப்பினும் நடந்த தள்ளு முள்ளுவை தடுக்க கூட்டத்தை நோக்கி சுட்டதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானை கைப்பற்றிய தாலிபன்கள் தற்போது காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்குள் முகாமிட்டுள்ளனர். இத்தனை ரணகளத்திற்கும் இடையிலும் தாலிபன்கள் எடுத்துள்ள முடிவு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆம், காபூலுக்கு புதிய பெயர் சூட்டும் ஆலோசனையில் தாலிபன்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று தாலிபான்கள் மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாலிபான்கள் அமெரிக்க படைகளால் ஒடுக்கப்படும் வரை இந்தப் பெயர்தான் தாலிபான்களால் ஆப்கானிஸ்தானுக்கு சூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *