• Tue. Mar 25th, 2025

தயாரிப்பாளரை தலை தெறிக்க ஓடவிட்ட கீர்த்தி சுரேஷ்…!

By

Aug 14, 2021

சிறுத்தை சிவா – அஜித் காம்பினேஷனில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் பாசக்கார அண்ணன் என இருவேறு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மெகா ஸ்டார் சிரஞ்சீவி அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷிடம் தயாரிப்பாளர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் மெகா ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க சம்மாதம் தெரிவிப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். தங்கச்சி கேரக்டரில் நடிக்க 3 கோடியா என தலைசுற்றி போன தயாரிப்பாளர் தரப்பு, தற்போது சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.