


பா.ஜ.க சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியுள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் என்கிற பெயரில் அரசியல் கட்சியினரை வசைபாடியுள்ளதற்கும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம்:
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் பா.ஜ.க நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது போலி நாடகம், இதன் காரணமாக கர்நாடக விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டியவர்,
மேகதாது பிரச்சனையில் விவசாயிகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் பிரிவினையை தூண்ட நினைக்கும் தமிழக பாஜக வின் கனவு நிறைவேறாது, நிச்சயம் மண்ணை கவ்வுவார்கள் என்று தெரிவித்த பி.ஆர்.பாண்டியன், தஞ்சை உண்ணாவிரதம் போலி நாடகம் என்றும், மேகதாதுவில் அணைகட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், பிரதமரை கண்டித்து போராட்டம் நடத்தாமல் கர்நாடக அரசை கண்டிப்பது தேவையற்றது.

என்றவர் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் என்பது அரசியல் முதிற்சியற்றது என்றார். அண்ணாமலை IPS பதவியை ராஜினாமா செய்தது உள்நோக்கம் உடையது, சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது, இதன் மூலம் ஒட்டுமொத்த IPS தேர்வு எழுதியவர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது, எனவே அண்ணாமலை ஏன் ராஜினாமா செய்தார் என்பதனை விளக்கவேண்டும் என்றார்.

