அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உல்லியக்குடி கிராமத்தில் ரூ.4.52 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு கூட திறப்பு விழா நிகழ்ச்சி ஜூலை 20 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா தலைமை தாங்கி சத்துணவு கூடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் அகிலா, ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சண்முகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.