ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் சோலார் பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக பஸ் நிலைய வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தில் 46 பஸ் ரேக், நான்கு பேரல்ரேக், கடைகள், அலுவலகம், நிர்வாக அலுவலகம், ரெஸ்டாரன்ட், டாக்சி ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளன. இந்த கட்டுமான திட்ட வடிவத்தில் மக்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால் 9489092000 என்ற மொபைல் மற்றும் வாட்ஸ்அப் எண், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளும் கருத்து தெரிவிக்கலாம்.