• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சொக்கநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள்..

Byadmin

Aug 4, 2021

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி அம்மன் திருக்கோவிலின் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. முன்னதாக அம்மன் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய கலசங்களை அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி பூஜையுடன் யாகபூஜைகள் துவங்கி சிவாச்சாரியர்கள் பிரமாண்ட யாக குண்டத்தை சுற்றி அமர்ந்து பல்வேறு யாக ஹோமங்கள் நடத்தினர் யாகத்தில் 108 மூலிகை பொருட்கள் பழங்கள் பூமாலைகள் சமர்ப்பிக்கப்பட்டது இதனை அடுத்து மூலவர் ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. இதனையடுத்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா கற்பூர ஆராதனை காட்டப்பட்டது.