• Mon. Jan 20th, 2025

கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை!…

By

Aug 10, 2021

கேரளாவில் வரும் 20ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, இடுக்கி அணை, தேக்கடி, வாகமன், மூணாறு, பருந்துப்பாறை, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவோர் ஆர்டிபிசிஆர் எனப்படும் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் கொண்டு செல்வதுடன் ,ஒரு தவணையாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதற்கான சான்றும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை கேரளாவில் அதிகமாக பரவி வருகிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கேரள அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த திணறி வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாத்தலங்கள் திறப்பதற்கான அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.