கோத்தகிரி அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த நிலையில் தற்போது அதே கிராமத்தில் மூன்று கரடிகள் உலா வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் உலா அதிகரித்துள்ளது. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக வலம் வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்திற்குள் புகுந்து கரடி ஒன்று கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது . அதனை கடந்த வாரம் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் அதே கிராமத்தின் அருகில் மூன்று கரடிகள் உலா வரும் காட்சிகள் தான் இது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடிகளை கண்காணித்து வருகின்றனர். கடந்த வாரம் கரடிகளுக்கு கூண்டு வைத்த நிலையில் மீண்டும் கரடிகள் கிராமத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.