சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மீராமிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய சமூகவலைதளத்தில் பதிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்ததை அடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மீரா மிதுனை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது வரும் நிலையில், தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும்..! என வாய் சவாடல் பேசி வம்பை வலுவாக்கிக்கொண்டார்.
இப்படி ஆணவமாக பேசும் மீரா மிதுனை ஏன் இன்னும் கைது செய்ய வில்லை என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சென்னை அழைத்து வருகின்றனர்.
தன்னை கைது செய்ய போலீசார் வருவதை அறிந்த மீரா மிதுன் அதையும் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் போலீசார் தனது அறைக்குள் நுழைந்துள்ளதை காட்டும் மீரா மிதுன், கொஞ்சமும் மரியாதை இல்லாமல், “இவனுங்க எல்லாரும் என்னை டார்ச்சர் பண்றாங்க. முதலமைச்சரே ஒரு தமிழ் பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? என கதறி அழுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…