• Wed. Feb 19th, 2025

ஓலிம்பிக்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு!..

Byadmin

Aug 4, 2021

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக சென்ற வீரர்களில் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். பேட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். பதக்கப்பட்டியலில் இந்தியா 64ம் இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1928 முதல் அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்ற இந்தியா 8 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 15 பதக்கங்களையே பெற்றுள்ளது. 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களில் யாரும் தங்கம் பெறவில்லை என்பது வேதனையான ஒன்று.

உலக பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் என்பவர் மிட்டல் வெற்றி வீரர் அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி ஒலிம்பிக்குக்கு வீரர்களை அனுப்பி வருகிறார். 120 போட்டியாளர்களை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா அனுப்பியது. இதுவரை ஒரு வெள்ளியும் 1 வெண்கலம் என 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இதற்கு முன்பு வரை ஒலிம்பிக்கில் ரஷ்யா மற்றும் சோசலிச நாடுகள் தான் பதக்கங்களை குவித்து வந்தன. ரஷ்யா சிதறுண்ட பிறகு இப்போது உலகின் மிக முக்கியமான சோசலிச நாடாக உள்ள சீனா தான் அதிக பதக்கங்களை பெற்று வருகிறது. அதற்கு பிறகு அமெரிக்கா அதிக பதக்கங்களை பெற்று வருகிறது.

அமெரிக்கா பதக்கப்பட்டியலில் 2ம் இடத்திற்கு வருவதற்கு அந்த நாட்டின் கருப்பின மக்கள் தான் காரணம். விளையாட்டில் சாதி, மதம் பார்த்தும் அரசியல் வாதிகளின் சிபாரிசில் வருபவர்களையும் பார்த்து பார்த்து அனுப்பினால் இப்போது மட்டுமல்ல இனி வரும் காலத்திலும் இந்தியா பதக்கப்பட்டியலில் பின்தங்கியிருக்க வேண்டி வரும். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இது தவிர்க்க முடியாது. இத்தாலி ஒரு சின்ன நாடு 5 தங்கங்களை வென்றுள்ளது.

பிரேசில் 4 தங்கங்களை வென்றுள்ளது. தாய்லாந்து மொராக்கோ போன்ற சின்ன சின்ன நாடுகள் கூட ஒரு தங்கம் வென்றுள்ளன. இந்திய ஹாக்கி அணி விளையாடும் போது அந்த வீரர்களை ஊக்குவிப்பது போல பிரதமர் மோடி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருப்பதாக செய்தி வைரலானது.

ஓலிம்பிக் போட்டியில் கூட பிரதமர் தன்னை பிரபலப்படுத்த வேண்டும் என்று தான் நினைக்கிறார். அவர் பதவியேற்றது முதல் இந்திய வீரர்களை தயார்படுத்தியிருந்தால் இந்த அவல நிலை இந்தியாவிற்கு வந்திருக்காது. சீனாவிற்கு அடுத்து உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு தங்கம் கூட கிடைக்கவில்லை என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஆகும்.

தங்கமான வீரர்களை நழுவவிட்டுவிட்டு தங்க பதக்கத்தை தேடினால் எப்படி? எதிர்காலத்திலாவது சாதிக்க துடிக்கும் இளைஞர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினால் மட்டுமே தங்கங்களை குவிக்க முடியும்.