• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!…

By

Aug 8, 2021

7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், செய்தி தொடர்பு அலுவலர்களையும், பணியிட மாற்றம் செய்து உள்ளது. ஆனாலும் தொடர்ந்து அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்து வருகிறது. இப்போதும் 7 ஐ.ஏ.எஸ். ஆதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலாளராக பதவி வகித்து வரும் செந்தாமரை நில நிரவாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச்செயலாளராக பதவி வகித்து வரும் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வரும் எம். அருணா கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பதவி வகித்துவரும் சரவண்குமார் ஜதாவத் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரை பொது (தேர்தல்) துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை துணை செயலாளராகப் பதவி வகித்து வரும் ஜே.ஆனிமேரி ஸ்வர்ணா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை இணைச்செயலாளராக பதவி வகித்து வரும் ஜான் லூயிஸ் நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறை இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச்செயலாளராக பதவி வகித்து வரும் எம்.லட்சுமி சி.எம்.டி.ஏ. தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.