• Thu. Mar 28th, 2024

இந்தியா-பாகிஸ்தான் போர் 50 ஆவது ஆண்டு வெற்றி விழா.

Byadmin

Jul 14, 2021

இந்தியா-பாகிஸ்தான் போர் 50 ஆவது ஆண்டு
வெற்றி விழா : கன்னியாகுமரியில் ராணுவத்தினர் தீபம் ஏற்றி கொண்டாட்டம்

கன்னியாகுமரி , ஜூலை.12-

இந்தியா பாகிஸ்தான் போர் நிறைவுபெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி நேற்று இந்திய ராணுவத்தைச் சேர்ந்த முப்படையினரும் கன்னியாகுமரியில் வெற்றி தீபம் ஏற்றி கொண்டாடினர் .
1971 போரில் இந்திய ஆயுதப்படைகள் பெற்ற வெற்றியை நினைவுகூறும் வகையில் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. தேசிய போர் நினைவுச் சின்னத்தின் ஜோதி சுடரிலிருந்து நான்கு வெற்றி ஜோதிகள் எடுக்கப்பட்டு , ஒவ்வொன்றும் 1971 ஆம் ஆண்டு போர் வீரர்கள் மற்றும் போர் விதவைகள் வாழும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக நான்கு திசைகளுக்கு கொண்டு செல்லப் படுகின்றன.

தெற்கு திசையின் வெற்றி ஜோதி சுடர் ஐ.என்.எஸ் கட்டப்பொம்மன் தளத்திற்கு வந்து சேர்ந்த போது தளபதி கேப்டன் ஆஷிஷ் கே ஷர்மா மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஜோதியினை பெற்றுக் கொண்டனர்.
வீரர்கள் செய்த தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக மாலை அணிவிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. 1971 வெற்றியைக் குறிக்கும் போர் வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஒரு கலாச்சார நிகழ்வினை பெண்கள் மற்றும் குழந்தைகள் நடத்தினர். அனைத்து கோவிட் நெறிமுறைகளையும் பின்பற்றி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நாளை 13 ஆம் தேதி, வெற்றி தீபம் ஐ.என்.எஸ் கட்டபொம்மனிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் வழியாக செல்லும். என்.சி.சி வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் கடலோர காவல்படையால் வெற்றி சுடர் பெறப்படும். அதன்பிறகு மதுரை நோக்கி செல்லும் வழியில் சுடர் ஐ.என்.எஸ் பருண்டுவிடம் ஒப்படைக்கப்படும்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன், நாகர்கோவில் துணை ஆட்சியர் சிவகுருநாதன், கன்னியாகுமரி டி எஸ் பி ராஜா ஆகியோர் பங்கேற்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *