தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் ஆனைமலை ஆழியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெழிந்து வருகிறது . வால்பாறை மலைப்பகுதிகளில் இருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் வரக்கூடிய கவி அருவியில் இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. கொரனோ தடை காலமென்பதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.