• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஆலடிப்பட்டியில் இரு சமுதாய மக்களுக்கு மயான எரியூட்டி பிறை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு..

Byadmin

Aug 2, 2021

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஆலடிப்பட்டியில் மருத்துவ சவர சமுதாய மக்கள் மற்றும் வண்ணார் சமுதாக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சமுதாய மக்கள் ஆலங்குளம் நகர பாரதிய ஜனதாக கட்சி தலைவர் சிம்சன். இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, பொதுச்செயலாளர் கலை, மாவட்ட செயற்குழு வைத்தியலிங்கம், பிரச்சார பிரிவு கந்தசாமி தலைமையில் ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகததிற்கு திரண்டு வந்தனர்.
ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுவில் கடந்த 2013ம்ஆண்டு வானம் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட எரியூட்டு பிறை கட்டிடம் கட்டித்தர தகுந்த நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.