• Thu. Jan 23rd, 2025

அடங்காத மீரா மிதுனுக்கு சரியான ஆப்பு!…

By

Aug 15, 2021

பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டது தொடர்பாக மீரா மிதுன் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தலைமறைவான மீரா மிதுனை நேற்று கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுனை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். தான் பேசியதற்கு சற்றும் வருந்தாத மீரா மிதுன் தொடர்ந்து எல்லை மீறிய காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போதும் போலீசார் தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கடந்த 24 மணி நேரமாக தனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் கமிஷனர் அலுவலகம் என்றும் பாராமல் கூச்சலிட்டார். தான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், தன்னை மட்டும் உடனே கைது விட்டதாகவும், என் கையை உடைக்க காவல்துறையினர் முயற்சிக்கின்றனர் என்றும் கூச்சலிட்டபடியே சென்றார்.

இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் மீரா மிதுனை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.