• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்…

Byadmin

Jul 28, 2021

கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள செக்கானூரணி அருகிலுள்ள கொக்குளம்குளம் கிராமத்தில் பேக்காமன் கருப்பு கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவிலில் பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருவதாகவும் பூசாரி ஆகவும் கோடாங்கி ஆகவும் குதிரைகளாகவும் கோவில் சம்பந்தமான அனைத்து உரிமைகளையும் இவர்களை செய்து வருவதாகவும் கூறுகின்றனர் இது மற்றொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் இவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மூலம் வழிபாடு செய்வதற்கு தடுத்து நிறுத்துவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 50-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை 12 வாரத்தில் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் ஆனால் இன்னும் இது குறித்து முடிவெடுக்க படாத நிலையில் இருப்பதாகவும் வருகிற 15-ஆம் தேதியன்று பன்றி குத்தும் விழா நடைபெற உள்ளதை தடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் என் தொடர்பாக நல்ல முடிவை தமிழக அரசு ஏற்படுத்தி தர தவறும் பட்சத்தில் கொக்குளம் பேக்காமன் கருப்பு கோவில் நுழைவு போராட்டம் நடத்த வேண்டும் நிலை ஏற்படும் என்பதையும் வலியுறுத்தினர் பேட்டி இன்குலாப் விடுதலை சிறுத்தை கட்சி.