• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளின் வலது, இடது மூளைகளின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்தும் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி

Byகுமார்

Sep 23, 2024

மதுரையில் குழந்தைகளின் வலது மற்றும் இடது மூளைகளின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்தும் மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் 3500 பேர் பங்கேற்றனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் 4 முதல் 14 வயது குழந்தைகள் பங்குபெற்ற மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் மொத்தமாக 3520 மாணவ, மாணவியர்கள் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 பிரிவுகளில் மூன்று நிமிடம் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக அபாக்கஸ் பயிற்சி மூலம் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை, மன வலிமை, தனித்திறமை போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், குழந்தைகளின் இடது மற்றும் வலது மூளை செயல்பாடுகளை தூண்டி சிறந்த நினைவாற்றல் மற்றும் தனிதிறமைகளை வளர்த்து கொள்ள தூண்டுதலாக அமைகிறது என்பதால் பெற்றோர்களும், ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.