• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு… மத்திய அரசு உத்தரவு..!!

Byகாயத்ரி

Sep 30, 2022

இந்தியாவில் முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதை இசட் பிளஸ் ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், முக்கிய பிரபலங்கள் போன்றவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது . தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐபி என்கிற மத்திய புலனாய்வு அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கு அண்மையில் ஒரு அறிக்கை அனுப்பி இருக்கிறது. இதன் பின்னர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து இசட் பிளஸ் பாதுகாப்பு படை பிரிவில் 10 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் உள்பட 55 பாதுகாப்பு படை வீரர்கள் முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.