• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் யுகாதி திருநாள் கொண்டாட்டம்.

ByI.Sekar

Apr 21, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கம்மவார் உறவின்முறை சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் கொண்டாட்டம் மற்றும் விருந்து சிறப்பாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு முன்னதாக ஆண்டிபட்டி மையப்பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பாப்பம்மாள் புரம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான பரதம் கோலாட்டம் ,ஒயிலாட்டம், கரகம் ,சிலம்பம் மற்றும் ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் 2023 – 24 ஆண்டுகளில் சமுதாயத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து யுகாதி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் பாலமுருகன், செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் நாகராஜன் உள்பட விழா குழுவினர் செய்திருந்தனர்.